ப்ளாக் உருவாக்குவது எப்படி?

முதலில் http://www.gmail.com/ போய் உங்களுக்கென ஒரு gmail account உருவாக்கிக் கொள்ளுங்கள். ஏற்கனவே ஒரு ஜிமெயில் அக்கவுண்ட் இருந்தாலும், blogging க்கு என புது அக்கவுண்ட் ஒன்று உருவாக்கிக் கொள்வது நல்லது என்பது என் அபிப்பிராயம்.


இப்போ, http://www.blogger.com/ ஓபன் செய்யுங்க. அதில் கீழ்கண்டவாறு இருக்கும்.


இதில் உங்கள் gmail user id, password கொண்டு லாக் இன் செய்யுங்கள். இப்போ கீழே உள்ள ஸ்கிரீன் வரும்.
இதில் display name என்று இருக்கும் இடத்தில் உங்க பெயரை அல்லது புனைப் பெயரை தரவும். ஒவ்வொரு பக்கத்துக்கு கீழும் இப்பெயர் தான் வரும். (for example, posted by: sumazla). அதன் கீழ் உள்ள செக் பாக்ஸில் டிக் செய்து விட்டு, continue என்ற பட்டனை க்ளிக் செய்யவும். இப்பொழுது, கீழ்கண்டவாறு தோன்றும்.
முதலில் blog title. இதில் உங்க ப்ளாகின் தலைப்பை கொடுக்கவும். ரொம்ப யோசனை செய்து கொண்டு இருக்க வேண்டாம். எப்பொழுது வேண்டுமானாலும் தலைப்பில் மாற்றங்கள் செய்து கொள்ளலாம். உதாரணமாக பூக்களைப் பற்றிய உங்கள் ப்ளாகிற்கு Flowers என்று title கொடுங்கள்.

அடுத்து ப்ளாக் அட்ரெஸ். இது தான் உங்கள் வலைப்பூவின் பெயர். இது ஈமெயில் ஐடி போல, ஒரு முறை கொடுத்து விட்டால் மாற்ற முடியாது. நன்கு யோசித்து நல்ல தலைப்பாக தேர்ந்தெடுங்கள். நான் தேர்ந்தெடுத்த தலைப்பு sumazla. அது எந்த தலைப்பாக இருந்தாலும் அதனுடன் டாட் ப்ளாக்ஸ்பாட் டாட் காம் என்பது சேரும். உதாரணமாக http://sumazla.blogspot.com/. இந்த பெயரை explorer ல் யார் அடித்தாலும் உங்க ப்ளாக் ஓபன் ஆகும்.

ஈமெயில் ஐடி போல பல பெயர்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருக்கும் ஆதலால் அவைலபிலிடி availability செக் பண்ணிக்கோங்க. முடிந்ததா, இப்ப continue பட்டனை க்ளிக் பண்ணுங்க. மீதி அடுத்த அத்தியாயத்தில்.

10 comments:

 1. ITSS REALLY GREAT WORK
  THNX

  FAAIQUE

  ReplyDelete
 2. வணக்கம்
  நான் ஓமனில் இருக்கிறேன் ப்ளாக் தொடங்கும் போது
  மொழி அரபில் வருகிறது
  எப்படி மாற்றம் செய்வது
  நன்றி

  ReplyDelete
 3. முதல் படத்தில், வலது புறம் மேலே பாருங்கள், language என்று இருக்கிறது. அதில், english அல்லது விரும்பும் மொழியை தேர்ந்தெடுங்கள்.

  ReplyDelete
 4. pleas e tell me how to add visitor counter for my page. and for my each blog.
  please visit my blog page www.bloggerilaya.blogspot.com and tell me ur comments. basically my intention is to blog in tamil right now im new and i dont know hoe to do it . i trust u can help me in this.

  ReplyDelete
 5. பிரி வெப் அமைப்பது எப்படி

  ReplyDelete
 6. We the Alalson Business Services & Translation
  that we inform and do any kind of business
  from your scope.

  We can do the commission basis so we require
  your specification with deal having your
  appointment at convince arrange the meting.

  We look forward to an expeditious response
  from you.

  Regards,

  Y. Aziz
  Operation & Marketing
  تليفون: 5752831 6 971+ الألــ

  ReplyDelete
 7. நண்பரே ,உங்கள் பதிவுகளை பார்த்து நான் ஒரு ப்ளாக் உருவாக்கிவிட்டேன் ஆனால் என் ப்ளாக் டொமைன் name வேலை செய்யவில்ல www .saravananaprabhuelibrary .blogspot .com என்பது அது ...


  இதை google search இல் அடித்தால் கீழ் கண்ட error வருகிறது நான் என்ன செய்ய
  உங்கள் தேடல் - http://saravanaprabhuelibrary.blogspot.com/. - எந்த ஆவணங்களுடனும் பொருந்தவில்லை.

  ஆலோசனைகள்:

  எல்லா சொற்களும் சரியாக எழுத்தப்பட்டுள்ளதா என உறுதிசெய்க.
  வேறு அடிப்படைச்சொற்களை வைத்து முயற்சிக்கவும்.
  மேலும் பொதுவான அடிப்படைச்சொற்களை வைத்து முயற்சிக்கவும்.
  தேடல் முடிவுகள்
  The Purple Octopus Parade‎
  விளம்பரம்www.worldsciencefestival.com/‎
  Neurologist Oliver Sacks and John Hockenberry riff backstage.
  Google+ இல் 2,335 பின்தொடர்பவர்கள் உள்ளனர்


  எனக்கு உதவி செய்யவும்...

  saravanaprabhuseenivasagan@gmail .காம் என்பது என் மெயில் id ..

  நன்றி


  ReplyDelete
 8. Innovative IT Solutions Consultancy marathahalli bangalore Innovative IT solutions helps freshers and experienced graduates and post graduates in getting placed in IT companies.

  ReplyDelete
 9. அண்ணா நான் blog கணக்கு thedangiden ஆனா next step enna செய்யணும் னு sollunga

  ReplyDelete