டாஷ் போர்ட் ஐட்டம்ஸ்

டாஷ்போர்டு லிங்கை க்ளிக் செய்த உடன் கிழே காணும் பக்கம் தோன்றும். இனி ஒவ்வொரு முறை நீங்கள் log on செய்ததும், இந்த பக்கத்துக்குள் தான் முதலில் போவீர்கள்.
மேலே இருக்கும் படத்தைப் பாருங்கள். இதில் இடது புறம் இருப்பது தான் உங்கள் ப்ரொஃபைல். அதில் உங்களுக்கு விருப்பமான போட்டோ இணைத்துக் கொள்ளலாம். அதில் உங்களைப் பற்றிய விஷயங்களைப் போட்டு வைத்துக் கொள்ளலாம்.


வலது புற மூலையில் பாருங்கள். create blog என்ற லிங்க். உள்ளது அதில் சென்று நீங்கள் உங்களுக்கென்று வெவ்வேறு தலைப்புகளில் எத்தணை blog வேண்டுமானாலும் உருவாக்கிக் கொள்ளலாம்.


கீழே பாருங்கள், flowers என்று இருப்பது தான் உங்க blog க்கு நீங்கள் ஏற்கனவே கொடுத்த டைட்டில். அதன் கீழே இருக்கும் new post என்பதை க்ளிக் செய்து எப்போ வேண்டுமானாலும் நீங்கள் புதிதாக போஸ்ட் செய்யலாம்.


மொத்தம் 4 tab நீங்கள் எல்லா இடத்திலும் பார்க்கலாம். அது, posts, settings, layout, view blog என்பதாகும். இதில் view blog அழுத்தினால், நம்ம blog திறக்கும். settings அட்வான்ஸுடு ஆப்ஷன். அதனால், இப்போதைக்கு அதை விட்டு விடலாம். போஸ்டிங் ஏற்கனவே நாம் பார்த்தாயிற்று. அடுத்து நாம் பார்க்கப் போவது layout. லே அவுட் பற்றி கண்டிப்பாக எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டும்.


இப்போ நீங்கள் லே அவுட் க்ளிக் செய்யுங்கள். கீழ்கண்ட பக்கம் விரியும்.


இடது புறம் மேலே பாருங்கள். page elaments, fonts and colours, edit html, pick new template என 4 tabs இருக்கும். இதில் fonts and colours க்ளிக் செய்து நாம் நம் ப்ளாகின் கலர் மற்றும் fonts ஐ மாற்றிக் கொள்ளலாம். edit html என்பதை விட்டு விடுங்கள். அது அட்வான்ஸுடு ஆப்ஷன். நமக்கு தேவை இல்லை. pick new template ல் போய் நாம் நம் ப்ளாகின் தோற்றத்தை மாற்றிக் கொள்ளலாம். அதனால், நம் ப்ளாகில் இருக்கும் posts எதுவும் அழியாது. அப்படியே புது template ல் வந்து விடும்.

அடுத்து முக்கியமான விஷயம் page elements. இது நம் blog ன் தோற்றத்தின் புளூ பிரிண்ட் என்று வைத்துக் கொள்ளலாம். பாருங்கள் flowers(header) என்பதற்கு கீழே இருக்கும், edit ஐ க்ளிக் செய்து நாம் தலைப்பை மாற்றிக் கொள்ளலாம். அது போல blog posts என்பதற்கு கீழே இருக்கும் edit ஐ க்ளிக் செய்து நமக்கு வேண்டும் விஷயங்கள் அதில் தோன்றும் படி செய்யலாம்.

About Me, Followers, Blog Archieve போன்றவை அதில் default ஆக இருக்கும். அது வேண்டாமென்றால், அதன் கீழே இருக்கும் edit க்ளிக் பண்ணி remove கொடுத்து விடலாம், அல்லது நாம் விரும்பிய மாற்றங்கள் செய்து கொள்ளலாம்.

ஒரு முறை remove கொடுத்து விட்டால், எப்படி மீண்டும் வரவழைப்பது? அதற்குத் தான் add a gadget இருக்கிறது. add a gadget க்ளிக் செய்தால் இது போன்ற பல items இருக்கும். அதில் தேவையானதை அதிலுள்ள + குறி அழுத்தி எடுத்து நம் ப்ளாகில் போட்டுக் கொள்ளலாம்.

நாம் போட்டுக் கொண்டவற்றை, அப்படியே, click and drag செய்தால், நகரும், நாம் வேண்டும் இடத்தில் வைத்துக் கொள்ளலாம்.

ஆயிற்று அவ்ளோ தான். நீங்க ப்ளாக் தொடங்கியாச்சு. successful blogger ஆக என் வாழ்த்துக்கள்.

இனி அடுத்து advanced blogging tips மற்றும் ப்ளாகின் மூலம் எப்படி சம்பாதிப்பது என்றும் சொல்லித் தருகிறேன். (இப்பவல்ல, அதற்கு ஒரு மாதம் ஆகும், அதற்குள் உங்க ப்ளாகை நன்றாக டெவெலப் செய்து வைத்திருங்கள்.)


கீழே உங்கள் பதிவுகளில், உங்க சந்தேகங்களைக் கேட்கலாம்.

13 comments:

 1. ஹாய் சுகைனா சூப்பர்ப்பா.இப்ப நானும் ப்ளாக் பற்றி தெரிந்துக் கொண்டேன்.நல்ல தெளிவான விளக்கம். அதன் மூலம் சம்பாதிக்கலாமா?அதை தெரிந்துக் கொள்ள ஆவலா இருக்கிறேன்.மீண்டும் நன்றி சுகைனா.

  ReplyDelete
 2. ஹாய் ப்பா, உங்கள் பேர் என்ன?
  google adsense மூலம் நாம் சம்பாதிக்கலாம். அது பற்றி எழுதும் முன் advanced blogging tips, பற்றி எழுத வேண்டும். இன்னும் ஒரு வாரம் பொறுங்கள். அதையும் விளக்கமாக எழுதுகிறேன். அதற்குள் ஒரு ப்ளாக் கிரியேட் செய்து விடுங்கள். நீங்கள் ‘என்’ எழுத்து இகழேல் பகுதியில் சைடில் இருக்கும், ‘உங்கள் பக்கத்தில்’ பதிவு செய்யுங்கள். அங்கே பதில் தருகிறேன்.
  சுஹைனா.

  ReplyDelete
 3. nanaum ippothan oru blog arambichurikken. Ungal thakavalkal ubayogamaka ullana.

  ReplyDelete
 4. புரியாத விஷயத்தை எளிதாக விளக்கியமைக்கு நன்றி...தொடர்ந்து கற்றுக்கொடுக்க வாழ்த்துக்கள்...
  - கதிரவன்

  ReplyDelete
 5. என் மானசீக குருவுக்கு வணக்கம். உங்கள் வழிகாட்டுதலின்படி நான் வலைபூ உருவாக்கிவிட்டேன்.அதில் உள்ள குறை நிரைகலை தங்களால் சுட்டிக்காட்ட முடியுமா?please.
  தங்கள் அனைத்து படைப்புகளும்,முயற்சிகளும் வெற்றி பெறவாழ்த்துக்கள்.
  என்றும் நேசமுடன் ஸ்ரீதர்.

  ReplyDelete
 6. BURJ KHALIFA, DUBAI---Inside Photos இப்படி ஒரு பதிவு போட்டேன் அது தமிளிஷில் தொடரும் இடுகை கள் பகுதியில் இல்லை ஆனால் கமெண்ட் மட்டும் வருது ஓட்டும் விழவில்லை .ஏன் ? உங்களுக்கு தெரிந்தால் சொல்ல முடியுமா ?

  ReplyDelete
 7. மிகவும் நன்றி ]
  நான் முயற்சி செய்து பார்க்கிறேன்
  இனியன் பாலாஜி

  ReplyDelete
 8. வணக்கங்க.,நான் முருகேசன்,கரூர்..ஒன்னுமே தெரியாம கம்யூட்டர்ல கேம் மட்டுமே வெளையாடிக்கிட்டு இருந்த என்ன,தமிழ்ல டைப் அடிக்கற அளவுக்கு தேத்திவுட்ட உங்கள என்னிக்கும் மறக்க மாட்டேன்..ஆனா நான் பிலாக்குல எழுதி அனுப்பினா யாருக்கும் போக மாட்டேங்குது..என்னோட அட்ரஷ் mddjuli@gmail.com..என்னோட பிலாக்குல என்ன தப்புன்னு கண்டுபிடிச்சு சொல்லமுடியுமா? பிலீஷ்..என் செல் நம்மர் 9843064700...நன்றி..நன்றி..ரொம்ப நன்றி..,

  ReplyDelete
 9. நன்றி சுமஜ்லா. பயனுள்ள பதிவுகள். உங்கள் பதிவுகளைப் பார்த்துத்தான், புதிய ஓர் வலைப் பதிவை ஆரம்பித்திருக்கிறேன். [தாரகை] என்ற பெயரில் இஸ்லாமிய சரித்திர ஏடுகள், குரான் கதைகளைப் பதிவது முக்கிய நோக்கம். YOU TUBE ஐ எப்படி வலையில் புகுத்துவது? அடுத்த பதிவில் விடை வேண்டி வாழ்த்தி விடை பெறுகிறேன்

  ReplyDelete
 10. நல்ல.தகவல். சுஹைனா உங்கள நினைச்சேன். அடக் கடைசில நீங்கதானா!?

  நன்றி.

  ReplyDelete