ப்ளாக் என்றால் என்ன?

முதலில் ப்ளாக் (blog) என்றால் என்ன? என்று தெரிந்து கொள்ள வேண்டும். இதோ நீங்கள் படித்துக் கொண்டிருக்கிறீர்களே, அது தான் ப்ளாக். வேண்டுமானால் இலவச வெப்சைட் என்று வைத்துக் கொள்ளலாம். ப்ளாகிற்கு தமிழில் வலைப்பூ என்பார்கள்.

யார் வேண்டுமானால், ப்ளாக் தொடங்கலாம். அதில் உங்களுக்கு தேவையான எல்லா விஷயங்களையும் படங்களையும் போட்டு வைத்துக் கொள்ளலாம். உலகம் முழுவதும் இருந்து மற்றவர்கள் அதைப் பார்க்க முடியும்.

ப்ளாக் தொடங்குவது மிக எளிது. பணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. ஜிமெயில் (gmail.com ) உங்களுக்கு இலவசமாக அதைத் தருகிறது. பெரிய அளவில் computer knowledge ம் தேவை இல்லை. பேஸிக் கம்ப்யூட்டர் அறிவுடன், கொஞ்சம் கற்பனைத் திறனும் இருந்தால் போதும்.

முதலில் ப்ளாக் தொடங்கும் முன், எதற்காக ப்ளாக் தொடங்குகிறீர்கள்; அதில் என்ன போடுகிறீர்கள் என்று ஒரு லே அவுட் போட்டுக் கொள்ளனும். தமிழிலா, ஆங்கிலத்திலா என்று முடிவு செய்து கொண்டு, தமிழில் என்றால் அதற்கான typing software install செய்து கொள்ளுங்கள்.

உதாரணமாக உங்கள் ப்ளாகில் பூக்களைப் பற்றி எழுதப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு ஒரு அவுட் லைன் போட்டுக் கொள்ளுங்கள். ப்ளாக் உருவாக்க நீங்கள் ரெடி. எப்படி உருவாக்குவது என்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

-சுமஜ்லா